• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அரசு மருத்தவமனையில் அடிப்படை கட்டமைப்புகளை சரி செய்யக்கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
திண்டுக்கல் மாவட்ட மருத்துவக் கல்லூரி முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஆர்பாட்டத்தின் போது மாவட்ட மருத்துவ மனையாக இருந்த பொழுது இருந்த அதே நிலை தான் தற்போதும் நீடிக்கிறது திண்டுக்கல் மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனையான தரம் உயர்த்தப்பட்ட பிறகு தலை காயப்பிரிவு. நரம்பு பிரிவு .இதய பிரிவு உள்ளிட்டபிரிவுகளில் போதிய மருத்துவர்கள் இல்லை .அதே போல் போதுமான மருத்துவ உதவியாளர்கள் இல்லை 600 பேர் பணி செய்ய வேண்டிய செவிலியர் பணிக்கு தற்போது 300 செவிலியர்கள் தான் உள்ளனர்.இதேபோல் அனைத்து துறைகளிலும் போதிய ஊழியர்கள் இல்லை. மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உண்டான அனைத்து மருத்துவ உபகரணங்களும் மாநில சுகாதார அமைச்சர் மா சுப்பிரமணியன் வழங்க வேண்டும். இங்கு வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.
ஆனால் குறிப்பிட்ட தலைக்காயப்பிரிவு, நரம்பு பிரிவு, இதயப்பிரிவு உள்ளிட்ட பிரிவுகளுக்கு வரும் நோயாளிகளை உரிய சிகிச்சை அளிக்கப்படாமல் இங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு தான் அனுப்பி வைக்கின்றனர், மருத்துவக் கல்லூரிக்கு தேவையான மருத்துவர்களை அமர்த்தி இங்கேயே சிகிச்சை அளிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதய சிகிச்சை பிரிவில் ஆஞ்சியோ செய்வதற்கு இங்கு உரிய உபகரணங்கள் கிடையாது. ரத்தப் பரிசோதனையில் போதிய பணியாளர்கள் கிடையாது. .அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும் மேலும் கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்றவற்றை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஆர்ப்பாட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்