• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மக்கள் ஊர் திரும்புவதால் கொரோனா தொற்று சற்று அதிகரிக்கக்கூடும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Byகாயத்ரி

Jan 17, 2022

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியாதவாது:

கொரோனா பெருந்தொற்று அதிவேகமாக பரவிய நிலையில் தினசரி பாதிப்பு சென்னையில் 8 ஆயிரம் என்ற அளவுக்கு எகிறியது. நேற்று சற்று குறைந்திருந்தாலும் பொங்கல் விடுமுறை முடிந்து பொதுமக்கள் ஏராளமானோர் திரும்பி கொண்டிருக்கிறார்கள். இந்த ஒன்று கூடுதலால் அடுத்த ஒரிரு நாட்கள் தொற்று சற்று அதிகரிக்கலாம்.இருப்பினும் கொரோனா தொற்று விரைவில் கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

தொற்று எண்ணிக்கை கூடுதலாக இருந்தாலும் உயிரிழப்பு மிகவும் குறைவாக இருப்பது ஆறுதலானது.அரசை பொறுத்தவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி எந்த சூழ்நிலையையும் சமாளிக்க தயார் என்ற நிலையில் இருக்கிறோம். ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் 2700, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 2050, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 1600 படுக்கைகளும் நந்தம்பாக்கம் கொரோனா சிறப்பு மையத்தில் 950, ஈஞ்சம்பாக்கம், மஞ்சம்பாக்கம், கேளம்பாக்கம், தாம்பரம் சித்த மருத்துவ கல்லூரி ஆகிய இடங்களில் தலா 100 படுக்கைகளும் தயாராக உள்ளது.

தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 91 ஆயிரம் படுக்கைகள் உள்ளன. இதில் 8 ஆயிரம் படுக்கைகள் மட்டுமே நிரம்பி உள்ளன.ஆனாலும் பொதுமக்களிடம் கேட்டுக் கொள்வது கட்டாயம் முகக்கவசம் அணியுங்கள், இரு தவணை தடுப்பூசியையும் போட்டுக் கொள்ளுங்கள்.60 வயதை கடந்தவர்களில் 90 லட்சம் பேர் இன்னும் 2-வது தவணை ஊசி போட்டுக்கொள்ளவில்லை. கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு அனைவரும் தடுப்பூசியை விரைவாக போட்டுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.