சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் உள்ள செயின்ட் மைக்கேல் பொறியியல் கல்லூரி மற்றும் தொழில்நுட்ப தனியார் கல்லூரியில் 31வது பட்டமளிப்பு விழா கல்லூரியின் தாளாளர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ் தலைமையில் ceo பிரிட்ஜெட் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஐபிஎம் சாப்ட்வேர் கம்பெனியின் ப்ரோக்ராம் ஆப்ரேட்டர்லதா ராஜ்கலந்து கொண்டு சிறப்புரையாற்றி கல்லூரி மாணவ மாணவியருக்கு பொறியியல் பட்டங்களை வழங்கி கௌரவித்தார்.

நிகழ்ச்சியில் பிரைன் பாக்ஸ் கம்பெனியின் நிர்வாக இயக்குனர் மதியழகன் , கல்லூரி முதல்வர் கற்பகம் அனைத்து துறை பேராசிரியர்கள் கல்லூரி மாணவ, மாணவிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
