குமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான கீரிப்பாறை, காளிகேசம், வாழையத்துவயல், மாறாமலை, கரும்பாறை உள்ளிட்ட இடங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதனால் அப்பகுதியில் உள்ள ரப்பர் தோட்டங்களில் பால் வெட்டும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. ஈரப்பதம் மற்றும் வழுக்கும் நிலை காரணமாக தொழிலாளர்கள் பணிக்கு செல்ல முடியாமல் உள்ளனர்.
இதனால் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரப்பர் தொழிலாளர்கள் இன்று பணியில் ஈடுபடவில்லை.