அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு மாநில சிறுபான்மை யினர் ஆணையம் சார்பில், சிறுபான்மையினர் பிரதிநிதிகள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அருட்தந்தை சொ.ஜோ அருண் சே.ச, தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி, தமிழ்நாடு மாநில சிறுபான் மையினர் ஆணையம் துணைத்தலைவர் .எம்.எம்.அப்துல் குத்தூஸ் (எ) இறையன்பன் குத்தூஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 13 பயனாளிகளுக்கு ரூ.65,000 மதிப்பில் மின் மோட்டருடன் கூடிய விலையில்லா தையல் இயந்திரங்களும், 14 பயனாளிகளுக்கு கிறித்துவ மகளிர் உதவும் சங்கம் மூலம் ரூ.1,40,000 மதிப்பில் நலத்திட்ட உதவிகளும், 13 பயனாளிகளுக்கு உலமாக்கள் மற்றும் பணியாளர் நல வாரிய உறுப்பினர் அட்டைகளையும், 05 பயனாளிகளுக்கு இலவச பித்தளை தேய்ப்பு பெட்டிகளும் என மொத்தம் 45 பயனாளிகளுக்கு ரூ.2,37,760 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் வழங்கி சிறப்புரையாற்றினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா, தமிழ்நாடு மாநில சிறுபான்மை யினர் நல அலுவலகம், சென்னை கண்காணிப் பாளர்.அமீர்கான், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர்கள் ஹேமில்டன் வெல்சன், நாகூர் அ.ஹ.நஜிமுதீன், பிரவீன் குமார் டாட்டியா, இராஜேந்திர பிரசாத், எம்.ரமீத் கபூர், ஜெ.முகம்மது ரஃபி, சு.வசந்த், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ்செல்வன், அரியலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் (பொ) பி.சுமதி மற்றும் இதர அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
