• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம் தொடர்பாக ஆலோசனை கூட்டம்

பெரம்பலூர் விற்பனைக்குழுவின் கீழ் இயங்கும் ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில்.  விற்பனைக்குழு செயலாளர் சுரேஷ்பாபு  அறிவுருத்தலின்படி, மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம்(இ-நாம்) தொடர்பாக வியாபாரிகள் மற்றும் விவசாயிகளிடையே ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.
கண்காணிப்பாளர் ராஜேஷ்குமார்   தலைமை வகித்தார். முன்னதாக இளநிலை உதவியாளர் கலைவாணி வரவேற்றார் கூட்டத்தில் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம்( இ-நாம்) ) தொடர்பாக அணைத்து விபரங்கள் மற்றும் விற்பனைக்கூட பயண்பாடுகள் மற்றும் வசதிகள் குறித்து கூட்டத்தில் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.  தொடர்ந்து வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கேட்ட சந்தேகத்தினை மேற்பார்வையாளர்கள்  அழகுதுரை, ஆகியோர்கள் விளக்கமாக எடுத்துரைத்தனர். இறுதியில் இளநிலை உதவியாளர் விஜயகுமார் நன்றி தெரிவித்தார்.கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஒழுங்குமுறை விற்பனைக்கூட அணைத்து பணியாளர்களும் ஒன்றிணைந்து செய்திருந்தனர்.