• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

குவாரி விஸ்தீரணத்திற்கான கருத்துக்கேட்புக் கூட்டம்..,

ByT. Balasubramaniyam

Dec 19, 2025

அரியலூர் மாவட்டம், செந்துறை ஊராட்சி ஒன்றியம், ராஜலெட்சுமி மஹாலில் அரியலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில், தி/ள். செட்டிநாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் (பி) லிட், உத்தேசிக்கப்பட்டுள்ள செந்துறை உஞ்சினி சுண்ணாம்பு கன்கர் குவாரி, விஸ்தீரணம் 22.14.5 ஹெக்டேர், புல எண்கள் 575/2B, 582/8A, 582/8B, 582/8C, 582/8D, 582/8E மற்றும் பிற, செந்துறை கிராமம், செந்துறை வட்டம், அரியலூர் மாவட்டம் தொடர்பாக பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி, தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், இத்திட்டம் செயல்படுத்தும் முறைகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆணையம் 4D, பனகல் மாளிகை, சைதாப்பேட்டை சென்னை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

மேலும் இக்கருத்துக்கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் மாசுக்கட்டுபாடுகள் குறித்தும் மற்றும் கிராம இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் தங்களின் கோரிக்கைகள் குறித்தும் கருத்துக்களை பதிவு செய்தார்கள். பின்னர், இக்கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை அளித்தனர். அனைத்து கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்பட்டு, பொதுமக்களின் நலன் கருதி திட்டங்கள் செயல்படுத்தப்படும் என மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி, தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் இராஜராஜேஸ்வரி,செந்துறை வட்டாட்சியர் வேலுமணி அரசு அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.