ரூபாய் 10,000 கடனை திருப்பிக் கொடுக்காததால் கட்டிட தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவருடைய நண்பரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் கூத்தனூரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் கோவையில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார். இவர் கடந்த 23 ஆம் தேதி கோவை ராஜ வீதியில் உள்ள மாசாணி அம்மன் கோவில் அருகே பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வெரைட்டி ஹால் சாலை போலீசார் விரைந்து சென்று ராஜேந்திரன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி ராஜேந்திரன் குடிபோதையில் உயிரிழந்ததாக வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் ராஜேந்திரனின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது. அதில் தலையில் தாக்கப்பட்டதற்கான காயங்கள் இருந்ததால் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு இருந்தது. உடனே போலீசார் ராஜேந்திரன் வேலை செய்த பகுதிக்கு சென்று விசாரித்தனர். அப்பொழுது ராஜேந்திரன் மதுரை மேலூர் சேர்ந்த நாகராஜ் என்பவர் எப்பொழுதும் சுற்றித் திரிந்ததாகவும், அவர்கள் இரண்டு பேரும் நண்பர்கள் என்றும் அங்கு வேலை செய்தவர்கள் தெரிவித்தனர்.
உடனே காவல் துறையினர் நாகராஜன் பிடித்து விசாரித்தனர். அப்பொழுது அவர் முன்னுக்கு, பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் நாகராஜனை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது அவர் ராஜேந்திரன் கட்டையால் அடித்து கொலை செய்தது. ஒப்புக்கொண்டாள் இதனால் காவல் துறையினர் அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி நாகராஜை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட நாகராஜ் அளித்த வாக்குமூலம் குறித்து காவல் துறையினர் கூறும் போது :
ராஜேந்திரன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாகராஜ் இடம் ரூபாய் 10 ஆயிரம் கடன் வாங்கி உள்ளார். அந்த பணத்தை விரைவில் கொடுத்து விடுவதாக கூறி உள்ளார். ஆனால் குறிப்பிட்ட காலத்துக்குள் பணத்தை திரும்பிக் கொடுக்கவில்லை. இது தொடர்பாக அவர் பலமுறை ராஜேந்திரனிடம் கேட்டு உள்ளார். அப்பொழுது அவர் பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.
சம்பவத்தன்று மாசாணி அம்மன் கோவில் அருகே ராஜேந்திரன் நின்று கொண்டு இருந்தார். அப்பொழுது அங்கு வந்த நாகராஜ் அவரிடம் கடனை திருப்பி கேட்டு உள்ளார். இதனால் அவர்கள் இரண்டு பேரும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நாகராஜ் அங்கு கடந்த கட்டையை எடுத்து ராஜேந்திரன் தலையில் ஓங்கி அடித்து விட்டு தப்பி ஓடி விட்டார். இதில் படுகாயம் அடைந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். என்று காவல் துறையினர் தெரிவித்து உள்ளனர்.