குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் நடைபெற்ற கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு வரும் சட்டமன்ற தேர்தலில், தமிழகத்தில் நாம் திமுக கூட்டணியில் தொடர்கிறோம் என்றாலும். குமரியில் காங்கிரஸ் வேட்பாளர் அல்லது நம் கூட்டணி வேட்பாளராக இருந்தாலும் வெற்றி என்பதை குறிக்கோளாக கொண்டு நம்முடைய தேர்தல் வியூகத்தை உருவாக்க வேண்டும் என பியிற்சிபட்டரையில் வகுப்பு நடத்தினார். இந்திய அரசு பணியில் (IAS), இன்றைய திருவள்ளூர் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசிகாந்த் செந்தில். இந்த நிகழ்வுக்கு பின் செய்தியாளர்களின் சந்திப்பில் பல்வேறு கேள்விகளுக்கு பதில் சொன்னார்.

காங்கிரஸ் கூட்டணியில் இருந்தாலும், கட்சியினரின் எண்ணங்களுக்கு மதிப்பும், மரியாதையும் கொடுக்கும் கட்சி என்பதால் கட்சியினரது கருத்துக்கு மதிப்புகொடுக்கிறது. காங்கிரஸ் பேர் இயக்கம். இதன் எதிரொலிதான். திமுக அரசில் காங்கிரஸ் பங்கேற்க வேண்டும், தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிடவேண்டும் என்ற கருத்தின் வெளிப்பாடு. இது குறித்த முடிவை அகில இந்திய காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கும்.
ஒன்றிய அரசு தமிழகத்திற்கு. சர்வசிகிட்சாயன் திட்டத்தில் தமிழகத்திற்கு தர வேண்டிய நியாயமான நிதியை தரவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாநோன்பு மேற்கொண்டேன்.

பாஜகவை பற்றிய என்னுடைய கருத்து பாஜகவுடன் கூட்டணியில் சேரும் எந்த கட்சியும் உருப்பட்டதில்லை . தமிழகத்தில் அதிமுக வின் நிலையும் இதுதான்.
இன்றைக்கு இந்தியாவில் ஒரு கொள்கை போர் நடக்கிறது. இந்த போரில் தலைவர் ராகுல் காந்தி தலைமை நிலையில் போராட்டத்தை நடத்தி வருகிறார்.தலைவர்
ராகுல் காந்தி வழியில் நாங்களும் அந்த கொள்கை போரில் ஈடுபட்டுள்ளோம் என
சொன்ன சசிகாந்த் செந்தில்,செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவரது நிலைப்பாட்டை தெரிவித்தார்.இந்த நிகழ்வில்.
குமரி கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் ராஜேஷ் குமார், குளச்சல் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் பிரின்ஸ், விளவங்கோடு சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் தாரகைகத்பட், மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர்.பினுலால் ஆகியோர் உடன் இருந்தனர்.