நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தியின் 54வது பிறந்த நாளை ஒட்டி திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் சர்வேயர் செல்வகுமார் தலைமையில் மாவட்ட செயலாளர் நந்தகோபால் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் ரத்ததானம் செய்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் டி.எஸ்.டி பொன்னுசாமி, மாநில நெசவாளர் அணி கதிரேசன், மாவட்ட துணை தலைவர்கள் காசி விஸ்வநாதன், ஈஸ்வரன், வட்டார தலைவர் ராஜா, மாவட்ட பொதுச் செயலாளர்கள் நந்தகோபால், கோபாலகிருஷ்ணன், இளைஞர் அணி தலைவர் முரளி தினேஷ், மாவட்ட செயலாளர்கள் பிரபு, பாலகிருஷ்ணன், சந்திரன், கந்தசாமி, குணசேகரன், பிரபாகரன், தாழ்த்தப்பட்டோர் பிரிவு மாநில தலைவர் முத்துசாமி, வட்டாரத் துணைத் தலைவர்கள் பொன்னுசாமி, நடராஜன், மருத்துவர் அணி செங்கோட்டையன், மகளிர் அணி காந்திமதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். மேலும் மருத்துவமனையில் பிரசவ வார்டில் இருந்த பெண்களுக்கு ரொட்டிகளை வழங்கினார்கள்.