கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை கைது செய்யக்கோரி, திருவட்டார் காவல் நிலையத்தில் திரண்ட காங்கிரஸ் கட்சியினரால் பரபரப்பு. அண்மைக்காலமாக குமரி மாவட்டத்தில் கொலை கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் திருவட்டார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் பல்வேறு குற்ற சம்பவங்களை போலீசார் மூடி மறைப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
