• Sat. Sep 27th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

திமுகவுக்கு எதிரா காங்கரஸ் போட்டியா..? என்னய்யா கொழப்புறீங்க…

Byகாயத்ரி

Feb 12, 2022

தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனை முன்னிட்டு வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன. ஆனால் தென்காசி மாவட்டத்தை பொருத்தவரை மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பழனி நாடாரின் வினோத முடிவால் மக்கள் மாபெரும் குழப்பத்தில் உள்ளனர்.அங்கு மட்டும் காங்கிரஸ் திமுகவுக்கு எதிராக தேர்தலை சந்திக்கிறது. அதோடு சிவகிரி பகுதியில் காங்கிரஸ் அமமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர் பகுதிகளில் திமுக வேட்பாளர்களை எதிர்த்து காங்கிரஸ் போட்டியிடுகிறது. இதனால் அங்குள்ள மக்கள் கடும் குழப்பத்தில் உள்ளனர்.