விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆண்டியாபுரத்தில் நடைபெற்ற பட்டாசு ஆலை விபத்தில் மூன்று பேர் பலியானார்கள். இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர்.

படுகாயம் அடைந்த இருவர்களை சிவகாசி அரசு மருத்துவமனை தீக்காய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பெற்று வந்தவர்களை அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திர பாலாஜி ஆஸ்பத்திரியில் நேரில் சந்தித்து சிகிச்சை குறித்து கேட்டறிந்து காயம் அடைந்தவர்களுக்கு விரைவில் குணமடைய ஆறுதல் கூறினார். அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.