• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

ஆகம விதிகளை மீறி நடையை திறந்ததாக புகார்..,

BySeenu

Jul 24, 2025

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆகம விதிகளை மீறி நடையை திறந்ததாக எழுந்த புகார் தொடர்ந்து அர்ச்சகர் உட்பட இரண்டு பேர் பணியிட நீக்கம் செய்யப்பட்டனர். கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல இன்று முதல் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கோவை எடுத்த பேரூர் பிரசித்தி பெற்ற பட்டீஸ்வரர் கோவில் உள்ளது இந்த கோவிலுக்கு வெளி மாவட்டங்கள் மற்றும் பண்டைய மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். இந்நிலையில் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் பிரமுகர் ஒருவருக்காக ஆகம விதிகள் மீறப்பட்டதாக சர்ச்சை எழுந்து உள்ளது.

அதாவது சம்பவத்தன்று இரவு ஒன்பது மணிக்கு நடை அடைக்கப்பட்ட பின்னர் பிரமுகர் ஒருவர் கோவிலுக்கு வந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு உயர் அதிகாரி ஒருவர் உத்தரவின்படி கோவில் நடை மீண்டும் திறந்து சாமி தரிசனம் செய்ய அனுமதித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோஸ் சமூக வலைதளத்தில் வைரலானது இதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தனர்.

இதன் அடிப்படையில் மருதமலை சுப்பிரமணியசாமி கோவில் தக்கார் செந்தில்குமார் பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உதவியாளர் விமலா ஆகியோர் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து முதல் கட்டமாக பேரூர் கோவில் எலக்ட்ரீசியன் வேல்முருகன் கோவில் அர்ச்சகர் சாமிநாதன் ஆகிய இரண்டு பேரை பணிகளை நீக்கம் செய்து மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவில் தக்கார் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

இந்த நிகழ்வை பக்தர்களே செல்போனில் பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்தது தான் விவகாரத்திற்கு தீப்பற்ற வைத்தது. வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, கோவில் நிர்வாகம் தற்போது கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதித்து உள்ளது.

இது போன்று கோவிலில் நடைபெறும் விதிமுறை மீறல்கள் வெளியில் தெரியாமல் இருந்து வந்தது.

இந்த வகை ஆகம மீறல்களை, தற்போதைய சூழ்நிலையில் பக்தர்களின் செல்போன் வீடியோக்களால் மக்கள் கவனிக்கத் தொடங்கி உள்ளனர்.

இதனால், கோவில் நிர்வாகத்தின் தற்போதைய தடை நடவடிக்கை ஒரு புதிய விவாதத்தையும் கிளப்பி உள்ளது.

மேலும் உள்ளே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேரில் இருந்த பழமை வாய்ந்த பொருள்கள் காணாமல் போனது. இதேபோன்று நடந்தால் மேலும் அங்கு உள்ள சிலையும் காணாமல் போய்விடும் என வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் கருவறையில் செல்போன் எடுப்பதற்கு தடை விதிக்கலாம், ஆனால் உள்ளே கொண்டு செல்வதற்கு எதற்கு ? தடை விதிக்க வேண்டும். இவர்கள் செய்யும் விதிமீறல்கள், முறைகேடுகள் வெளியே தெரிந்துவிடும் என்பதற்காக இந்த தடை விதித்து உள்ளனரா ? என பொதுமக்களும், பக்தர்களும் சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.