புதுக்கோட்டை ஆட்டங்குடி காமராஜ் நகர் மேல விழாக்கு டி பகுதியை சேர்ந்த பெரிய தம்பியா பிள்ளை என்பவர்களின் மகன் மற்றும் மகள் சிங்காரவடிவேலன் தேவகி அருணாச்சலம் பிள்ளை ஆகியோர் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று புகார் மனு வழங்கிய பிறகு செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்பொழுது தங்களுடைய பரம்பரை சொத்து திருமயம் தாலுகா குளம் மங்கலம் கிராமத்தில் மலைவயல் என்ற பகுதியில் 20 ஏக்கர் இடம் இருந்து வருவதாகவும் இந்த இடத்தை அங்கிருந்தவர்களுக்கு குத்தகைக்காக விடப்பட்டதாகவும் 20 ஆண்டுகளாக விவசாயம் செய்யாமல் குத்தகைக்கு மட்டுமே விட்டதாகவும் தற்பொழுது அந்த இடத்தில் சொந்தமாக விவசாயம் செய்ய முயற்சிக்கும் பொழுது குலமங்கலத்தை சேர்ந்த ஆனந்த வடிவேலன் தேவர் என்பவரின் மகன் சரகண வேல் இவருடைய மனைவி திருமயம் சட்டமன்ற தொகுதி திமுக வடக்கு ஒன்றிய துணைச் செயலாளராக இருப்பதாகவும் சரகண வேல் தங்களுடைய இடத்தை அபகரிக்கும் நோக்கத்தில் செயல்படுவதாகவும் விவசாய செய்ய செல்லும் தங்களை அடியாட்களை வைத்து தாக்குவதாகவும் அரசியல் பின்புலம் இருப்பதாக கூறி அதிகாரிகளையும் செயல்பட விடாமல் தடுப்பதாகவும் திமுக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதத்தில் நடந்து கொள்ளும் ஒன்றிய துணைச் செயலாளரின் கணவர் சரகணவேல் மீது நடவடிக்கை எடுத்து தங்களுக்கு உயிர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை மனு வழங்கினர். இந்த மனு மீது உடனடியாக பரிசீலனை செய்யப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்ததாக தெரிவித்தனர்.
திமுக சட்டமன்ற தொகுதி வடக்கு ஒன்றிய துணைச் செயலாளரின் கணவர் மீது புகார் வழங்கப்பட்டதால் எஸ்பி அலுவலகத்தில் பரபரப்பு காணப்பட்டது.







; ?>)
; ?>)
; ?>)