கரூரை சேர்ந்த நாகராஜ் என்பவர் தனது இரண்டு பிள்ளைகளையும் தகாத வார்த்தைகளாலும் ஆபாச வார்த்தைகளிலும் திட்டிய அரசு பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாகராஜ் கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியாளரின் நேர்முக உதவியாளரிடம் இன்று புகார் அளித்தனர் – நீதி வேண்டும். இல்லையேல் குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகம் முன்பு தற்கொலை செய்ததை தவிர வேறு வழியில்லை என தெரிவித்தார்.

கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் காணியாளம்பட்டி பகுதியில் உள்ள வீரியப்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ். இவர் தனது ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் மகளையும், 7ம் வகுப்பு படித்து வரும் மகனையும் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அரசு வழங்கிய சான்றிதழ்களை திரும்ப கொடுக்க வந்திருந்தார்.
இது குறித்து நாகராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.
எனது மகள் பெயர் ஹரிணி, ஸ்ரீ மனிஷா. உடையப்பட்டியில் உள்ள மாரிஸ் அரசு உதவி பெறும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
பள்ளி வேலை நேரத்தில் ஒரு நாள் விடுமுறை எடுத்துக் கொண்டு அரசு உதவி தொகை பெறுவதற்காக தபால் நிலையம் வந்திருந்தார்.
ஒரு நாள் பள்ளிக்கு விடுமுறை பிறகு சென்ற போது வீட்டுப்பாடம் செய்து வரவில்லை எனக் கூறி தமிழ் ஆசிரியர் வெங்கடாசலம் அனைத்து மாணவிகள் முன்பு கெட்ட வார்த்தையால் எனது மகளை ஆசிரியர் திட்டி வகுப்பறையை விட்டு வெளியேற்றி உள்ளார்.
முதலில் மிகவும் நொந்து போனார்.
இதுபோல் ஏற்கனவே பலமுறை எனது மகளை அந்த ஆசிரியர் பாலியல் எண்ணங்களை தூண்டும் வகையில். ஆபாசமாகவும் அருவருக்கத்தக்கதாகவும் பேசி உள்ளார். இதே போல பள்ளியில் தண்ணீர் குடிக்க சென்ற எனது மகனை சிறுவன் என்று கூட பார்க்காமல் ஜாதி பெயரை சொல்லி திட்டியுள்ளார்.
இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
அதனால் மாவட்ட கல்வி அலுவலர் புகார் கொடுத்து எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்தென். எனது புகார் கொடுத்து யாரும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கும் புகார் கொடுத்துள்ளேன். எனது மகளை அசிங்கமான வார்த்தைகள் திட்டிய ஆசிரியர் வெங்கடாச்சலம் மீதும் அவருக்கு துணையாக இருக்கின்ற ஆசிரியர் கேசவன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இன்று மீண்டும் கலெக்டர் அலுவலகம் வந்துள்ளேன்.
அப்போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் மனு அளிக்கப்பட்டது
பணியும் நடவடிக்கை எடுக்க விட்டால் எங்களுக்கு அரசு வழங்கிய ஆதார் அட்டைகள் ரேஷன் அட்டைகள் வாக்குரிமை அட்டைகள் திரும்ப ஒப்படைக்கு எடுத்து வந்துள்ளேன். எனக்கு நீதி வேண்டும். இல்லையேல் குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகம் முன்பு தற்கொலை செய்ததை தவிர வேறு வழியில்லை என தெரிவித்தார்.