• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

விலங்குகள் வதை தடுப்பு சங்க அலுவலகத்தில் புகார் !!!

BySeenu

Jun 25, 2025

கோவை மாவட்டம், வீரகேரளம் பகுதியில் வீடில்லா நாய் ஒன்று சுற்றிக் கொண்டு இருந்தது. இந்நிலையில் வீர கேரளம் பகுதியில் உள்ள ரவிக்குமார் என்பவரின் குடும்ப உறுப்பினர்கள் அங்கு உள்ள ஒரு கடைக்கு சென்று உள்ளனர். அப்போது அங்கு வந்த நாய் குறைத்ததாக கூறப்படுகிறது, குடும்ப உறுப்பினர்கள் உடனடியாக ரவிக்குமாருக்கு நாய் ஒன்று குறைக்கிறது என்று தகவல் கொடுத்து உள்ளனர்.

இரவு 11 மணிக்கு நான்கு சக்கர வாகனத்தில் வந்த ரவிக்குமார் கூர்மையான ஆயுதத்தைக் கொண்டு அந்த நாயின் தலையில் ஓங்கி அடித்து உள்ளார். ரத்தம் சொட்ட, சொட்ட அது அங்கு இருந்து தப்பி சென்றது. அங்கு இருந்து அவர்கள் உடனடியாக தண்ணீரை கொடுத்து ஆசுவாசப்படுத்தி உள்ளனர். பின்னர் சமூக ஆர்வலர் பாலகிருஷ்ணன் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் அந்த நாயை மீட்டு சீரநாயக்கன் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனையில் அதற்கு சிகிச்சை கொடுத்து உள்ளனர். 21 ம் தேதி சிகிச்சை பலன் அளிக்காமல் அந்த நாய் இறந்து உள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர் பாலகிருஷ்ணன் கூறும் பொழுது நாயை கொன்ற ரவிக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததாகவும், ஆனால் புகார் கொடுத்தும் வழக்கு பதிவு செய்யாமல் உள்ளதாக குற்றம் சாட்டி உள்ளார்.