மதுரை மாவட்டம் பரவையில் உள்ள மங்கையர்கரசி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வணிகவியல் மற்றும் வணிகவியல் கணினி பயன்பாட்டுத் துறை சார்பில் மாநில அளவிலான போட்டிகள் நடைபெற்றது.

வணிகவியல் துறைத் தலைவர் முனைவர் ஜெஸ்டினா ஜெயகுமாரி வரவேற்புரையாற்றினார். Merx & Minerva 2025 என்ற பெயரில் நடைபெற்ற இப்போட்டியில் பல்வேறு கல்லூரிகளிலிருந்து 400 க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். தலைமை விருந்தினர்களை வணிகவியல் கணினி பயன்பாட்டுத் துறை தலைவர் முனைவர் கலாரஞ்சனி அறிமுகப்படுத்தினார்.
இந்த நிகழ்ச்சிக்கு தலைமை விருந்தினராக அன்னபூர்ணா மிதாய் நிறுவனத்தின் இணை நிறுவனர் கவுரி சுஜன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ஜே. நவீன் குமார் மற்றும் சன் டிவி செய்தியாளர் கண்மணி சேகர் கலந்து கொண்டு மாணவிகளை உற்சாகப்படுத்தினர்.
நிகழ்ச்சியில் கல்லூரி தலைவர் முனைவர் அசோக் குமார், துணைத் தலைவர் பொறியாளர் சக்தி பிரனேஷ், சார்பு தலைவர் மருத்துவர் ஏ. சரவன பிரதீப் குமார் இணைத் தலைவர் மருத்துவர் திவ்யா மீனு ப்ரீதா,கல்லூரி முதல்வர் முனைவர் உமா பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். கல்லூரி கல்விப்புலத் தலைவர் முதல்வர் திருமதி. செந்தூர் பிரியதர்ஷினி வாழ்த்துரை வழங்கினார்.
இந்நிகழ்வில் கல்லூரிகளுக்கு இடையேயான பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் மாநிலம் முழுவதும் இருந்து வந்த கல்லூரி மாணவிகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியில் முதல் பரிசை தி லேடி டோக் கல்லூரி தட்டிச் சென்றது. இரண்டாவது இடத்தை வேல்லம்மாள் கல்லூரி பிடித்தது. மூன்றாவது இடத்தை பாத்திமா கல்லூரி பெற்றது. வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி நிறைவில் வணிகவியல் துறை இணை பேராசிரியர் கீதா கல்யாணி நன்றியுரை வழங்கினார்.