அத்துமீறி செயல்பட்டு வரும் விராலிமலை வருவாய்த்துறை வட்டாட்சியரை கண்டித்தும் பொய் புகார்களின் அடிப்படையில் ஏ பி மணி மற்றும் குடும்பத்தினரை தொல்லை கொடுத்து வரும் காவல்துறையின் நடவடிக்கைகளை கண்டித்து
ஒன்றிய செயலாளர் அய்யாதுரை தலைமையில் விராலிமலை தாலுகா அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் கே ஆர் தர்மராஜன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். அன்னவாசல் ஒன்றிய செயலாளர் எம் மீரா மொய்தீன் குன்றாண்டார் கோயில் ஒன்றிய செயலாளர் எஸ் நடராஜன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். கட்சியின் நிர்வாகிகள் என் விஜயரங்கன் யூ கருப்பையா பி கருப்பையா
என் மாரிமுத்து ஐ அந்தோணிசாமி ஏ அருளானந்தம் ஏ ஜமால் முகமது கே பன்னீர்
ஏ ஆர் ஆறுமுகம் ஆர் செபஸ்தியார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.