• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மதுரை விமான நிலைய வளாகத்தில் பரபரப்பு

ByKalamegam Viswanathan

May 5, 2025

மதுரை விமான நிலையத்தில் ஒளிப்பதிவாளர்களுக்கும், விஜய் பாதுகாப்பு பவுன்சர்களுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. த.வெ.க தலைவரும், நடிகருமான விஜய் ஜனநாயகன் திரைப்பட சூட்டிங் முடித்து இன்று மதியம் 12 மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.

முன்னதாக பத்திரிகையாளர்களுக்கு விமான நிலையத்தில் தனியாக நிற்பதற்கு இடம் ஒதுக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. இதனிடையே நுழைவாயிலில் நின்றிருந்த ஒளிப்பதிவாளர்கள் சிலர் விஜய் வந்தவுடன் விமான நிலையத்தின் நுழைவாயில் உள்ளே செல்ல முயன்றனர்.

அப்போது தடுத்து நிறுத்திய விஜயின் பவுன்சர்களுக்கும் – செய்தி ஒளிப்பதிவாளர்களுக்கும் இடையே லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டது. மதுரை விமான நிலைய வளாகத்தில் சற்று நேரம் பரபரப்பாக காணப்பட்டது.