• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் துவக்க விழா

BySeenu

Dec 1, 2024

கோவை பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் இந்திய பொருளாதாரம் சுயசார்புக்கான நோக்கம் குறித்த கருத்தரங்கு மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டு துறை துவக்க விழா நடைபெற்றது.

கோயம்புத்தூர், நவம்பர் 30, 2024 – கோவை பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் இந்திய பொருளாதாரம் சுயசார்புக்கான நோக்கம் குறித்த கருத்தரங்கு மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டு துறை துவக்க விழா கல்லூரி வளாகத்தில் உள்ள பொதிகை அரங்கில் நடைபெற்றது. கோவைசுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டு துறை நிறுவனர் டாக்டர் ஆர்.கே. கோவிந்தராஜன் அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் பிருந்தாதலைமை வகித்து வாழ்த்துரை வழங்கினார்.

ரூட்ஸ் நிறுவனத்தின் மனிதவளத் துறை இயக்குநர் டாக்டர் கவிதாசன் துவக்க உரையாற்றினார். கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டு துறை இயக்குனர் டாக்டர் டி சுரேஷ்குமார் சிறப்புரையாற்றினார். சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் ஓசை காளிதாசன் சிறப்புரையாற்றினார். இறுதியில் பொருளாதார துறை துறைத் தலைவர் ரவிக்குமார் நன்றியுரை கூறினார்.