அரியலூர் அருகே லிங்க தடிமேட்டில் அமைந்துள்ள வள்ளலார் கல்வி நிலைய வளாக கூட்டரங்கில்,கல்வி நிலையத்தின் . நிறுவனர் கொ.இரா.விசுவநாதனின் 57-வது ஆண்டு நினை வேந்தல் நிகழ்ச்சி நடை பெற்றது.

நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனை வரையும் கல்வி நிலைய செயலாளர் முனைவர் கொ.வி.புகழேந்தி வரவேற்றார்.நிகழ்ச்சிக்கு கல்வி நிலையத்தின் தலைவர் சீனி பால கிருஷ்ணன் தலைமை வகித்தார்.நிகழ்ச்சிக்கு வள்ளலார் கல்வி நிலைய உதவி செயலாளர் பெ.பாண்டியன், பொதுக்குழு உறுப்பின ர்கள் அலர்மேலு, பவானி பாண்டியன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

அரியலூர் மாவட்ட வன்னி யர் கல்வி வளர்ச்சி கழக உறுப்பினர் மற்றும் சோழன்குடிக்காடு, சிவஞானம் அறக்கட்டளை, நிறுவனர் க.குமார் வாண்டையார் , திரௌபதி திரைப்பட இயக்குநர் மோகன் ஜி , வன்னியர் கல்வி வளர்ச்சிக் கழக கௌரவத்தலைவர் மற்றும் ABMKPK பென்சனர் கூட்டமைப்பு கோ.சிவசிதம்பரம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக நிகழ்வில் கலந்து கொண்டு, அங்கு அமைந்துள்ள கல்வி நிலைய நிறுவனரின் திருவுருவசிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பு, செயலாளர் முனைவர் கதிர் கணேசன், அரியலூர் மாவட்ட வன்னியர் கல்வி வளர்ச்சி அறக்கட்டளை, பொதுச்செயலாளர். ஏ .கொளஞ்சிநாதன், தமிழ்ப்பண்பாட்டுப் பேரமைப்பு, அமைப்புச் செயலாளர்.அநல்லப்பன்,அரியலூர் மாவட்ட வன்னி யர் வளர்ச்சி கழக செயற் குழு உறுப்பினர்கள் அரியலூர் நம்பர் 1 அரிமா சங்க தலைவர் மற்றும் சங்க நிர்வாகிகள் உள்ளிட் டபலர்கலந்துகொண்டனர்.தொடர்ந்துகல்வி நிலைய செயற்குழு உறுப்பினர் செல்வராண 2024 2025ம் ஆண்டில் எட்டாம் வகுப்பில் முதல் மதிப் பெண் மற்றும் பேச்சுப் போட்டி, பாடல் உள்ளிட்ட திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியின் முடிவில் கல்வி நிலைய செயற்குழு உறுப்பினர் மற்றும் நிர்வாக அலுவலர் முனைவர் சு.அருள்குமார் நன்றி கூறினார்