கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தோகைமலை குன்னாக் கவுண்டம்பட்டியை சேர்ந்த ரெங்கராஜன் லாரி டிரைவர், இவர் மனைவி மற்றும் இரு மகன்களுடன் வசித்து வருகிறார். இன்று மூத்த மகன் தயாநிதி (20) திருச்சி தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கணிப்பொறியியல் படித்து வருகிறார்.

வீட்டு அருகே உள்ள வாதனை மரக்கிளைகளை வெட்டும் பொழுது மர கிளைகள் அவ்வழியாக சென்ற மின் கம்பியில் உரசி மின்சாரம் தாக்கி நிகழ்விடத்தில் தயாநிதி உயிரிழப்பு, தகவல் அறிந்த தோகைமலை போலீசார் தயாநிதி சடலத்தை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக குளித்தலை அரசு தலைமை மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.