தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க, அரியலூர் ஊராட்சி ஒன்றியம்,
தேளுர் ஊராட்சியில் உள்ள நெல் சேமிப்பு நிலையத்தினை மாவட்ட ஆட்சியர் பொ. இரத்தினசாமி நேரில் பார்வையிட்டு இருப்பில் உள்ள நெல் மூட்டைகளின் எண்ணிக்கை, முறையாக பராமரிக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியரிடம், தேளுர் நெல் சேமிப்பு நிலையத்தின் மொத்த சேமிப்பு அளவானது 15,000 டன் மற்றும் தற்போதைய இருப்பு 7432 டன் என சம்மந்தப்பட்ட அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டது. மேலும் நெல் இருப்பினை தொடர்ந்து பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும் எனவும், நெல் மூட்டைகள் நிலையத்திற்கு வரும் போதும் மற்றும் அவை பிற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கும்போதும் எடைகள் சரியாக உள்ளதா என்பதை உறுதிபடுத்துவதுடன் அதனை உரிய பதிவேடுகளில் தொடர்ந்து பதிவு செய்யவேண்டும் எனவும், வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதை தொடர்ந்து மழைகாலங்களில் நெல் மூட்டைகள் பாதிக்காத வண்ணம் பாதுகாப்பாக சேமித்து வைக்கவேண்டும் எனவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி, அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில் தேளுர் நெல் சேமிப்பு நிலைய இளநிலை தர ஆய்வாளர் அன்பழகன் மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.