• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கோவை ரெசிடென்சி ஒட்டல் அரங்கில்.., பிரபல நிறுவனத்தின் தங்கநகை கண்காட்சி..!

BySeenu

Dec 13, 2023
பிரபல ஜே.சி.எஸ்.ஜுவல் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தங்க நகை கண்காட்சி  கோவை ரெசிடென்சி ஓட்டல் அரங்கில் துவங்கியது. 
தங்க நகை விற்பனையில் தனி முத்திரை பதித்து வரும் ஜே.சி.எஸ்.ஜுவல் கிரியேஷன்ஸ் கோவையில் தனது விற்பனை கண்காட்சியை துவக்கி உள்ளது.கோவை அவினாசி சாலையில் உள்ள ரெசிடென்சி  ஓட்டல் அரங்கில் துவங்கி உள்ள இந்த கண்காட்சி இன்று டிசம்பர் 11 ந்தேதி துவங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. முன்னதாக நடைபெற்ற கண்காட்சி துவக்க விழாவில், ஜே.சி.எஸ்.ஜுவல்  கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அரவிந்த் குமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக  கோவையை சேர்ந்த தொழிலதிபர்கள் மனோகர், கிருத்திகா ஸ்ரீதர், ரிங்கி ஷா ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கி வைத்தனர்.
கண்காட்சியில், தங்கம் மற்றும் வைர நகைகள் ஏராளமான டிசைன்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பாரம்பரிய டிசைன்கள்,திருமணங்களுக்கான நவீன டிசைன் நகைகள் மற்றும்  வெள்ளி பொருட்களும் இடம் பெற்றுள்ளன. கண்காட்சியில் நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, சிறப்பு சலுகைகள் வழங்கப்பட உள்ளதாக நிர்வாகத்தினர் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் விற்பனை மேலாளர் பிரதிக், ஒருங்கிணைப்பாளர் உபாசனா ஆகியோர் கலந்து கொண்டனர்.