கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய பகுதியில் வசிக்கும் மல்லிகா (57)-வின் வீட்டிற்குள் கடந்த 31.01.2024 அன்று அடையாளம் தெரியாத நபர் உள்ளே நுழைந்து கத்தியை காட்டி மிரட்டி 13 சவரன் தங்க நகையை பறித்து சென்றுள்ளார். இது சம்மந்தமாக பாதிக்கப்பட்ட நபர் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் தலைமறைவான குற்றவாளியை விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன்., இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் தனிப்படை காவல்துறையினர் தலைமறைவான குற்றவாளியை தேடி வந்த நிலையில் இக்குற்றத்தில் ஈடுபட்ட ஜோதிபுரம் பகுதியைச் சேர்ந்த மரியன் மகன் டான் போஸ்கோ (57) என்பவரை இன்று (02.02.2024) தனிப்படையினர் கைது செய்து அவரிடமிருந்து, மேற்படி வழக்கின் சொத்துக்களான 13 சவரன் தங்க நகையை பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.
குற்றங்களை தடுத்திட பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்சப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.
