கோயமுத்தூர் – ஊட்டி பிரதான சாலை காரமடை காந்தி நகரில் கே.சி.பி.கார்டன் பிரீமியம் பிளாட்டுகள் மற்றும் வில்லா பிளாட்டுகள் விற்பனையை துவக்கியது.
இதற்கான துவக்க விழாவில் சின்னத்திரை பிரபலங்கள் மணிமேகலை,
பாலா பங்கேற்றனர். பிரிமியம் பிளாட், வில்லா மனைகள் விற்பனையில் முன்னனி நிறுவனமான கே.சி.பி.புரோமோட்டர்ஸ் தனது புதிய கே.சி.பி.கார்டன் புராஜக்டை கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் இருந்து, 500 மீட்டரில் காரமடை காந்தி நகரில் 4.5 ஏக்கரில் பிரமாண்டமான முறையில் துவக்கி உள்ளனர்.

இதற்கான துவக்க விழாவில் சின்னத்திரை பிரபலங்கள் மணிமேகலை மற்றும் பாலா ஆகியோர் கலந்து கொண்டனர். புதிய புராஜக்ட் குறித்து கே.சி.பி.புரோமோட்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் கே.சி.பழனிசாமி, உமா மகேஸ்வரி மற்றும் டாக்டர் நிஷாந்த் பாலாஜி ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர். DTCP மற்றும் RERA அங்கீகாரம் பெற்ற பிரீமியம் பிளாட்டுகள் மற்றும் வில்லா பிளாட்டுகள் 2 சென்ட் முதல் 5.5 சென்ட் வரை விற்பனைக்கு தயாராக உள்ளது.
1000 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு மத்தியில் உடனடியாக வீடு கட்டி குடியேற தயார் நிலையில் உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் அமைச்சிருப்பதாக தெரிவித்தார். குறிப்பாக, பிரமாண்டமான நுழைவாயில், 33 அடி தார்ச்சாலை, காம்பவுண்ட் சுவர். சோலார் தெரு விளக்கு, தனிப்பட்ட குடிநீர் இணைப்பு, குழந்தைகள் விளையாட்டு பூங்கா, நடைபாதை, வடிகால் வசதி, மேல்நிலை நீர் தேக்க தொட்டி, ஷட்டில் கோர்ட் கோவில்,24 மணி நேர கண்காணிப்பு கேமரா மற்றும் 24 மணி நேர செக்யூரிட்டி வசதி போன்ற இருபதிற்கும் மேற்பட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.KCP கார்டன் அருகிலேயே பள்ளிகள் மற்றும் அரசு கலை அறிவியல் கல்லூரி மற்றும் மருத்துவமனை போன்ற அனைத்து வசதிகளும் அருகில் உள்ளவாறு ஊட்டி மெயின் ரோட்டில் மிக சிறந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.