சீனாவிற்கு வெளியே உலகளவில் மிகப்பெரிய விண்டு கியர்பாக்ஸ் தொழிலகமான ZF விண்டு பவர் கோயம்புத்தூரில் அமைந்துள்ள மிக நவீன உற்பத்தி ஆலையில், 50 GW கியர்பாக்ஸ் திறனுள்ள மொத்த உற்பத்தி என்ற மைல்கல் சாதனையை புரிந்துள்ளது.
இச்சாதனை, இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் செயற்பிரிவில் ZF – ன் பொறுப்புறுதிக்கு சான்றாகத் திகழ்கிறது. 50 GW மைல்கல் என்பது, இந்தியாவின் காற்றாலை சந்தையில் ZF – ன் முன்கூட்டிய நுழைவிற்கும் மற்றும் தொடர்ச்சியான பொறுப்புறுதிக்கும் ஒரு சாட்சியமாகும்.

இது குறித்து பேசிய ZF குழுமத்தின் நிர்வாக உறுப்பினர் பீட்டர் லைய்யர் மேக் இன் இந்தியா திட்டத்திற் கீழ், இந்தியாவிற்கும் மற்றும் உலகிற்கும் அதாவது, உள்நாட்டைச் சேர்ந்த மற்றும் உலகளாவிய வாடிக்கையாளர்கள் ஆகிய இருதரப்பினருக்கும் கியர்பாக்ஸ்களை இத்தொழிலகம் வழங்கி வருவதால், இந்தியாவில் ரு முன்னணி கியர்பாக்ஸ் சப்ளையராக ZF விண்டு பவர் சிறப்பாக செயலாற்றி வருகிறது. இந்த உற்பத்தி வசதிகளை விரிவாக்குவதில் ZF குழுமம் செய்து வரும் முதலீடுகள், இப்பிராந்தியத்தின் வளர்ச்சிக்கான சாத்தியத்திறனுக்கும் மற்றும் இதன் நீண்டகால இலக்குகளுக்குமான ஒரு வலுவான சான்றாகத் திகழ்கிறது. நிலைப்புத்தன்மைக்கான குறிக்கோள்களில் நாங்கள் தொடர்ந்து பொறுப்புறுதியுடன் இயங்குகிறோம். 2030-ம் ஆண்டுக்குள் இந்நாட்டின் காற்றாலை மின்சார உற்பத்தி திறனை இரண்டு மடங்காக உயர்த்துவது என்ற இந்தியாவின் மிகப்பெரிய குறிக்கோளை அடைவதற்கு விரிவாக்கப்பட்ட உற்பத்தி வசதிகளின் காரணமாக கணிசமான பங்களிப்பை வழங்கக்கூடிய நிலையில் நாங்கள் இருக்கிறோம் என்றார்.
சுற்றுச்சூழல் மீதான பாதிப்பை குறைக்கவும் பசுமையான எதிர்காலத்திற்கு பங்களிப்பை வழங்கவும் மிக நவீன தொழில்நுட்பங்களையும் மற்றும் செயல்முறைகளையும் பயன்படுத்துகின்ற சிறந்த தொழிலகமாக கோயம்புத்தூர் ஆலை இயங்கி வருகிறது என்பது குறிபிடத்தக்கது.