• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கொழுக்கட்டையில் கரப்பான் பூச்சி பரபரப்பு..,

ByKalamegam Viswanathan

Jun 6, 2025

மதுரை பழங்காநத்தம் பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடியில் ஏராளமான சிறுவர் சிறுமியர்கள் பயின்று வருகின்றன. இந்நிலையில் இன்று காலை அங்கு பயிலக்கூடிய சிறுவர் சிறுமியர்களுக்கு சத்துணவு மாவு மூலமாக தயாரிக்கப்படும் கொலுக்கட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதனை வீட்டிற்கு எடுத்துசென்று உண்டு கொண்டிருந்தபோது திடீரென ஒரு கொலுக்கட்டைக்குள் கரப்பான் பூச்சி உயிரிழந்த நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது

இதனை பார்த்த சிறுமி அவரது தாயாரிடம் கொலுக்கட்டையில் பூச்சி இருப்பதாக கூறிய போது அதனை பிரித்துப் பார்த்த தாயார் கொலுக்கட்டைக்குள் கரப்பான் பூச்சி இருப்பது தெரிய வந்தது.

இதனால் பதட்டமடைந்த சிறுவனின் தாயார் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றபோது அங்கு மருத்துவர்கள் இல்லை என கூறியதால் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறிய நிலையில் தற்போது சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

நல்வாய்ப்பாக சிறுமி கொலுக்கட்டையை உண்பதற்கு முன்பாக கரப்பான் பூச்சி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் குழந்தைக்கு உடல் உபாதை ஏற்படவில்லை, இந்நிலையில் அங்கன்வாடி பணியாளர் அவசர அவசரமாக அங்கிருந்து வெளியேறினார்.

மதுரையில் அங்கன்வாடியில் வழங்கப்பட்ட கொலுக்கட்டைக்குள் கரப்பான் பூச்சி இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.