• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கிளஸ்டர் கால்பந்து விளையாட்டு போட்டி..,

BySeenu

Jul 29, 2025

கோவையில் சி.பி.எஸ்.இ.பள்ளிகளுக்கான கிளஸ்டர் கால்பந்து விளையாட்டு போட்டி ஈச்சனாரி ரத்தினம் பப்ளிக் பள்ளி சார்பாக ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது.

சி.பி.எஸ்.இ கிளஸ்டர் போட்டிகளின் ஒரு பகுதியாக ஐந்து நாட்கள் ,நடைபெற உள்ள இதில், 14 , 16,19 வயதுக்குட்பட்டோர் ஆகிய பிரிவுகளில் 450 க்கும் மேற்பட்ட சி.பி.எஸ்.இ பள்ளி அணிகளை சேர்ந்த ஓண்பதாயிரம் மாணவர்கள் பங்கேற்று உள்ளனர்.

இந்நிலையில் இதற்கான துவக்க விழா இரத்தினம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. ரத்தினம் கல்வி குழுமங்களின் தலைவர் மதன் செந்தில் தலைமையில் நடைபெற்ற விழாவில், இயக்குனர் ஷிமா செந்தில் முன்னிலை வகித்தார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுருபிராபகரன் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர்,அனைத்து துறைகளிலும் வேகமாக வளர்ந்து வரும் கோவை நகரம் தற்போது விளையாட்டு துறையிலும் தமிழக அளவில் முக்கிய இடமாக மாறி வருவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து அவர்,சர்வதேச தரத்தில் உருவாகி வரும் ஹாக்கி மைதானம் பணிகள் முடிந்து விரைவில் திறக்க உள்ளதாக தெரிவித்தார்.

5 நாட்களில் 9 வெவ்வேறு இடங்களில் நடைபெற போட்டிகள் குறித்து , ஒருங்கிணைப்பாளர் மதன் செந்தில் கூறுகையில், கோவையில் முதன்முறையாக மத்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கிளஸ்டர் கால்பந்து விளையாட்டு போட்டிகள் நடைபெறுவதாகவும்,சுமார் ஒன்பதாயிரம் மாணவர்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில்,பத்து இடங்களில் போட்டிகள் நடைபெறுவதாக தெரிவித்தார்.