• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் குவிந்த பொதுமக்கள்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள வெப்படை செங்குந்தர் திருமண மண்டபத்தில், மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இதில் மாற்று திறனாளிகள் நலத்துறை, காவல்துறை, வேளாண்துறை, மின்வாரியம் எரிசக்தி துறை, உழவர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, வங்கிக் கணக்கு துவக்குதல் ,ஆதார் சேவைகள் ,விவசாய இடு பொருட்களை மானியம் மூலம் பெறுதல், இ பொது சேவை மையம் ,படிப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் ,முதல் பட்டதாரி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சேவை முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த முகாமில் குவிந்தனர். இந்த நிகழ்வில் திமுக மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில், திமுக மத்திய ஒன்றிய பொறுப்பாளர் தளபதி செல்வம் ,எலந்த குட்டை ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாசலம், சௌதாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி நந்தகோபால், பாதரைத் பஞ்சாயத்து துணை தலைவர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.