நாகர்கோவிலில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம்.
குமரி மக்களவை முன்னாள் உறுப்பினர். ஏ.வி.பெல்லார்மின் தொடங்கி வைத்தார்.

குமரி மாவட்ட பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் ஊராட்சிகளில் பணிபுரிந்து வரும் திடக்கழிவு,தூய்மை பணியாளர்கள், வாகன ஓட்டுநர்கள், குடிநீர் வினியோக
பணியாளர்கள்,மின் பணியாளர்கள், மீட்டர் ரீடர்கள், மின்னணியாளர்கள்
என அனைவரையும் பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உட்பட்ட பல்வேறு கோரிக்கைகளை சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

மாநிலம் தழுவிய போராட்டத்திற்கும் அழைப்பு விடுவிக்க ப்பட்டது. அதன்படி
சி.ஐ.டி.யூ. தொழிற் சங்கத்தினர். நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு.
கன்னியாகுமரி மாவட்ட உள்ளாட்சி ஊழியர்கள் சங்க சி.ஐ.டி.யூ சார்பில் போராட்டம் நடந்தது.
போராட்டத்தை தொடங்கிவைத்து போராட்டம் வெல்ல நாம் தொடர்ந்து போராடி வெற்றிப் பெறவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.வி.பெல்லார்மின்
தெரிவித்தார்.

சாலை ஓரம் போராட்டம் திடீரென சாலைமறியல் போராட்டமாக மாறியது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட.150 பெண்கள் உட்பட 201_பேரை காவல்துறை கைது செய்தனர்.
ஆட்சியர் அலுவலகம் பகுதியில் உள்ள பிரதான சாலையில் போராட்டம் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகனங்கள் வேகமாக செல்ல முடியாது ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது.




