• Sat. May 4th, 2024

சோழவந்தான் மத்திய கூட்டுறவு வங்கியில் கடன் செலுத்தியவருக்கு மீண்டும் பணம் கட்ட சொல்லி குறுந்தகவல் வந்ததால் அதிர்ச்சி

ByN.Ravi

Apr 5, 2024

சோழவந்தான் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் சிறு குறு விவசாயிகள் மற்றும் சிறு வியாபாரிகள் சிறு தொழிலுக்காக கடன் வாங்கி திருப்பி செலுத்தி வருகின்றனர்.
கடந்த மார்ச் 30ம் தேதி இந்த வங்கியில் 2016 ஆம் ஆண்டு கடன் வாங்கியதில் கடன் பாக்கி உள்ளதாகவும், இதை மார்ச் 31ந்தேதி கடன் முழுவதும் பாக்கி இல்லாமல் செலுத்தி நேர் செய்யவும் என்று அவரவர் செல்போனுக்கு தகவல் வந்துள்ளது.
இதனால், வங்கியில் கடன் வாங்கிய வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த வங்கியில் 2016 ஆம் ஆண்டு கடன் பெற்று கடனை முழுவதும் திருப்பி செலுத்திய சீனிவாசன் என்பவர் கடந்த 30 ஆம் தேதி சோழவந்தானில், உள்ள மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளை மேலாளர் பார்த்தசாரதியைசந்தித்து இதுபோல் தகவல் வந்திருக்கிறது. நாங்கள் 2016 ஆம் ஆண்டு கடன் வாங்கி முழுவதும் செலுத்தி விட்டு அதிலிருந்து மூன்று முறை கடன் வாங்கி முழுமையாக செலுத்தி உள்ளோம். கடைசியாக செலுத்திய கடன் தொகை கடன் இல்லை என்று பாஸ்புக்கில் எழுதிக் கொடுத்துள்ளனர். ஆனால், எங்களுக்கு 2016 ஆம் ஆண்டு கடன் பாக்கி உள்ளதாகவும், கடனை செலுத்த வேண்டும் என்று குறுந்தகவல் வந்திருக்கிறது. இது எங்களுக்கு மனவேதனை தருகிறது என்று கூறியுள்ளார். இதற்கு கிளை மேலாளர் இது எங்களுக்கு சம்பந்தமில்லை மாவட்ட அதிகாரிகள் அனுப்பிய குறுந்தகவல் இருந்தாலும் உங்களுடைய பெயரில் உங்களது கணக்கில் 2016 ஆம் ஆண்டு கடன் பாக்கி உள்ளதாக காட்டுகிறது. ஆகையால், நீங்கள் கடனை செலுத்த வேண்டும் என்று கூறி மேலும், வாடிக்கையாளர் மனதை புண்படச் செய்து உள்ளார்.
சம்பந்தப்பட்ட வங்கியில் சிறு தொழில் செய்ய கடன் வாங்கி மாதந்தோறும் தங்களது தவணையை செலுத்தி மீண்டும் மறுபடியும் கடன் பெற்று தொழிலில் நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே, ஆன்லைன் மூலமாக வியாபாரம் செய்யக்கூடிய நிலை உள்ளதால் சிறு தொழில் பெட்டிக்கடை வைத்திருப்பவர்களின் வியாபாரம் தற்போதுமிகவும் குறைந்து வரும் நிலையில்தற்போது வாங்கிய கடனை கட்டுவதே சிரமப்பட்டு கட்டக்கூடிய நிலை உள்ளதாகவும், முறையாக கடனை அடைத்து திரும்ப கடன் பெற்றுள்ள நிலையில் பழைய கடனுக்கு பாக்கி உள்ளதாக கூறுவது சந்தேகமாக உள்ளது என்றும், 2016 ஆம் ஆண்டு கடன் பெற்ற சிறு வியாபாரிகள் குமுறுகின்றனர். ஆகையால், மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் அலட்சியத்தால் கடன் பாக்கி உள்ளதா, இல்லை அங்கு உள்ள பணியாளர் கூறுவது போல் அதிமுக ஜெயலலிதா ஆட்சியில் கடன் பெற்று அதற்காக வட்டிக் கடன் தள்ளுபடி செய்ததை தற்போதுள்ள அரசாங்கம் அந்த தள்ளுபடியை நீக்கி கடன் பெற்றவர்கள் மீது திணிக்
கிறதா என்று சந்தேகமாக இருக்கிறது என்று தெரிவித்தார்.
எது உண்மையோ தேசிய வங்கிகள் எத்தனையோ இருந்தும் கூட்டுறவு வங்கி மேம்படுத்த வேண்டும் என்று சாதாரண சிறு குறு விவசாயிகள் சிறு தொழில் நடத்தக்கூடிய சிறு பெட்டிக்கடை வியாபாரிகள் கணக்கு வைத்து சேமிப்பு மற்றும் நகை கடன், வியாபார கடன் விவசாய கடன் பெற்று வருகின்றனர் தற்போது, இவர்களுக்கு வந்திருக்கும் குரு செய்தி மூலம் இவர்களின் வாழ்வு கேள்விக்குறியாகி உள்ளதாக கூறுகின்றனர். வியாபாரிகள் ஆகையால், அரசும் மாவட்ட கூட்டுறவு வங்கிகளின் உயர் அதிகாரிகளும் இதற்கு உரிய விளக்கம் தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *