விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் கோதண்டராமர் கோவில் வளாகத்தில் விஜயதசமியை முன்னிட்டு கல்வி கற்க பள்ளிக்குச் செல்வதற்க்கு முன்பு குழந்தைகள் அஷராப்யாசம் நிகழ்சியில் கலந்துகொண்டு தாம்பூல தட்டில் வைக்கப்பட்டிருந்த அரிசியில் குழந்தைகள் ஒரு ரூபாய் நாணயத்தை கையில் வைத்து அ .ஆ.என்ற தமிழ் எழுத்துக்களையும் ஆங்கில எழுத்தில் ஏ என்ற வார்த்தையை எழுதியும் உச்சரிக்க வைத்து தங்கள் கல்வியை துவங்கினர்.

முன்னதாக குழந்தைகள் அனைவருக்கும் நாவில் தேன் தொட்டு வைக்கப்பட்டு குழந்தைகள் கற்கும் கல்வியும் உச்சரிப்பு தெளிவாக வர வேண்டும் என பிரார்த்தனையில் செய்யப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு குழந்தைகளுக்கும் கோதண்ட ராமசாமி கோவிலில் சிறப்பு அர்ச்சனைகளும் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை
கோதண்டராமர் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டு தங்கள் கல்வி பயணத்தை துவங்கினர்.
