அரியலூர் மாவட்டவிளையாட்டு அரங்க மைதானத்தில், மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியினை, மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி தலைமையில்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலையில்,போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்தார்.மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அலுவலர் லெனின் நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார்.

இந்நிகழ்வில் ஊரக வளர்ச்சி திட்ட முகமை திட்ட இயக்குநர் முனைவர் ஆ.ரா.சிவராமன்,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) பாலசுப்பிரமணியன், அரியலூர் நகர திமுக செயலாளர் இரா முருகேசன் ,நகராட்சி தலைவர் சாந்தி ஜெயங்கொண்டம் நகராட்சி தலைவர் சுமதி சிவகுமார், மற்றும் அரசு அலுவலர்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள்,விளையாட்டு பயிற்றுநர்கள் கலந்துகொண்டனர்.
