கன்னியாகுமரி கடற்கரையை ஒட்டிய பகுதியில் புகழ்பெற்ற ‘பதி’களில் ஒன்று முட்டபதி. முட்டப்பதியில் ஆண்டு தேறும், பங்குனி மாதம் திருவிழாவின் 10_வது நாளில் தேரோட்டம் நடைபெற்றது.
திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில் நாட்டுமக்களிடம் சாதிய பாகுபாடுகளால் மக்களை பிரித்து பார்த்த காலத்தில், குமரி மாவட்டம் சாமி தோப்பு பகுதியில் வாழ்ந்த முடிசூடும் பெருமாள் என்னும் முத்துக்குட்டி மக்கள் மத்தியில் உயர்வு, தாழ்வுகள் அற்ற சமூகமாக ஒரே நிரப்பில் வாழவேண்டும் என்ற தத்துவத்தை தோற்றுவித்த அய்யா வைகுண்டர் கண்ட மார்க்கமே அய்யா வழி. அய்யா வழி வழிபாட்டு தலைமை இடமாக சாமிதோப்பு திகழ்கிறது.


அய்யா திருத்தேரில் எழுந்தருளினார். இதை தொடர்ந்து பக்தர்கள் தேர்வடத்தை பிடித்து தேரை இழுத்தனர். இதில் ஏராளமான அய்யா வழி ஆண்,பெண் பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.