நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதியில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 442 பயனாளிகளுக்கு பள்ளிபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. வீட்டுமனை பட்டா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, புதிய திட்ட பணிகள் அடிக்கல் நாட்டி முடிவற்ற பணிகளை திறந்து வைக்க உயர்திரு மாவட்ட ஆட்சித் தலைவர் S. உமா, வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் S.M. மதுரா செந்தில், ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் K.E.பிரகாஷ், நகர மன்ற தலைவர் மோ.செல்வராஜ், குமாரபாளையம் நகர மன்ற தலைவர் சஷ்டி விஜய கண்ணன், நகர மன்ற துணைத் தலைவர் ப.பாலமுருகன்,
ஆலம்பாளையம் பேரூராட்சி தலைவர் சகுந்தலா ஆகியோர் பயனாளர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார்கள்.



அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.மேலும் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் இளங்கோவன், மத்திய ஒன்றிய பொறுப்பாளர் தளபதி செல்வம், வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் நாச்சிமுத்து, ஆலம்பாளையம் பேரூர் கழகச் செயலாளர் கார்த்திக் ராஜ், நகர கழக செயலாளர் அ. குமார், நகர அவைத் தலைவர் குலோப் ஜான் மற்றும் திமுக மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், மகளிர் அணி, இளைஞர் அணி அமைப்பாளர்கள், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள், மீனவர் அணி நிர்வாகிகள், சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், பயனாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


