• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கண்ணிவெடி வெடித்து மத்திய ரிசர்வ் படை காவலர் சுகுமாரன் படுகாயமடைந்து கால் அகற்றப்பட்டு சிகிச்சை

ByJeisriRam

Oct 3, 2024

ஜார்கண்ட் மாநிலத்தில் நக்சலைட் தீவிரவாத தேடுதலின் போது, கண்ணிவெடி வெடித்து தேனியை சேர்ந்த மத்திய ரிசர்வ் படை காவலர் சுகுமாரன் என்பவர் படுகாயமடைந்து கால் அகற்றப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது குடும்பத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி ஆறுதல் கூறினார்.

மேலும் தேனியில் உள்ள அவரது இல்லத்தில் அவரது குடும்பத்தினரிடம் தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆறுதல் தெரிவித்தனர்.

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் சுகுமாரன் இவருக்கு பிரீதிக்கா என்கிற மனைவி மற்றும் 4 மாத குழந்தை இருக்கின்றது.

மத்திய ரிசர்வ் காவல் படையில் பணியாற்றி வரும் சுகுமார் ஜார்கண்ட் மாநிலம் சிங்பூம் மாவட்டத்தில் நக்சலைட் தீவிரவாதிகளை பிடிப்பதற்கு நடந்த தேடுதல் வேட்டையின் போது, கண்ணிவெடி வெடித்து விபத்தில் படுகாயமடைந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவருக்கு ஒரு கால் அகற்றப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் படுகாயமடைந்த சுகுமாரன் குடும்பத்திற்கு சமூக வலைதளம் மூலம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆறுதல் கூறினார்.

இந்நிலையில் தேனி பூதிப்புரத்தில் சுகுமாரன், மனைவி பிரீத்திக்கா மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து அதிமுக தேனி மாவட்ட நிர்வாகிகள் ஆறுதல் தெரிவித்து என்ன உதவிகள் தேவை படுகிறதோ அதனை செய்து தருவதாக உறுதியளித்து சென்றனர்.