• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன் விசுவநாதன் தேசிய கொடி ஏற்றினார்…

ByKalamegam Viswanathan

Jan 26, 2024

மதுரை விமான நிலையத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை முகாம் வளாகத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன் விசுவநாதன் தேசிய கொடி ஏற்றினார் மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர்கள் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.

நாட்டின் 75 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு நாடெங்கும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு வருகிறது இதனை தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை முகாமில் மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டண்ட் விஸ்வநாதன் தேசியக் கொடி ஏற்றினார். வீரர்கள் அணிவகுப்பு மரியாதைக்கு பின் மத்திய தொழிற் பாதுகாப்படை வீரர்களுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து உரையாற்றினார்.


மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் தமது கடமையை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்து செயல்பட்டு வருகிறோம் பொதுமக்களுக்கும் நாட்டுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கி வருகிறோம் அது நமது சீருடைக்கும் கௌரவம் ஆக உள்ளது என்பதில் பெருமிதம் கொள்வோம் என கூறினார்.