• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா

BySeenu

Jun 23, 2025

கோவை, பேரூர் ஆதீனத்தின் 24-ம் குரு மகா சந்நிதானம் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா நடை பெறுகிறது. பாரம்பரிய சிவவேள்வி பூஜையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு உள்ளார்.

மேலைச் சிதம்பரம் எனும் புகழ் கொண்டதும் பேரூர் பேரூராதீனத்தைத் கி.பி 11-ம் நூற்றாண்டில் அருட்குரு சாந்தலிங்கப் பெருமான் தோற்றுவித்தார். அதன் பிறகு அவரின் அருள்வழியில் 24-ம் குருமகா சந்நிதானமாக தெய்வத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் திகழ்ந்தார். அவர் சைவத்தையும், தமிழையும் இரு கண்களாகப் போற்றினார். அவரின் வழியில் கல்வி, சமுதாயம், மருத்துவம், பாரம்பரியம், பண்பாடு ஆகிய பணிகளை ஆதீனம் தற்போது சிறப்பான முறையில் செய்து வருகிறது.

கோவையில் நடைபெற்று வரும் RSS நூற்றாண்டு விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று உள்ளனர்.

கோவை பேரூர் ஆதின மடத்தில் நடைபெற்று வரும் ஆர்.எஸ்.எஸ் விழாவில் பா.ஜ.க வின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரும் ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று உள்ளனர்.

விழா மேடைக்கு வருகை தந்த மோகன் பகவத்திற்கு முருகப்பெருமானின் வேல் கொடுத்து வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.