பேரூர் ஆதீனத்தின் 24 -ம் குரு மகா சந்நிதானம் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா கோவை மாவட்டம் சிறுவாணி சாலையில் பேரூர் ஆதீன வளாகத்தில் வரும் ஜூன் 23-ம் தேதி நடைபெற உள்ளது. அன்று நடைபெறும் பாரம்பரிய சிவவேள்வி பூஜையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கலந்து கொள்ள உள்ளார்.

பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார் மற்றும் சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகளார் ஆகியோர் பங்கேற்று இந்நிகழ்ச்சி குறித்து பேசினர். இவர்களுடன் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொள்ளாச்சி பகுதி நிர்வாகி கோபால் உடன் இருந்தார்.
இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது:-
மேலைச் சிதம்பரம் எனும் புகழ் கொண்டதும் பேரூர் பேரூர் தீனத்தைத் கி.பி 11-ம் நூற்றாண்டில் அருட்குரு சாந்தலிங்கப் பெருமான் தோற்றுவித்தார். அதன் பிறகு அவரின் அருள் வழியில் 24-ம் குரு மகாசந்நிதானமாக தெய்வத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் திகழ்ந்தார். அவர் சைவத்தையும் தமிழையும் இரு கண்களாகப் போற்றினார். அவரின் வழியில் கல்வி, சமுதாயம், மருத்துவம், பாரம்பரியம், பண்பாடு ஆகிய பணிகளை ஆதீனம் தற்போது சிறப்பான முறையில் செய்து வருகிறது.
பேரூர் ஆதீனத்தின் 24–ம் குரு மகா சந்நிதானங்கள் உலகெங்கும் விரிந்து மிகச் சிறப்பாக செயலாற்றி வரும் தமிழ் நெறி வழிபாட்டின் மறுமலர்ச்சியை உருவாக்கியவர்கள். குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கக்கூடிய இடங்களுக்கு சென்று அவர்களின் இல்லங்களில் திருவிளக்கு வழிபாடுகளை நடத்தியது பல்வேறு வகையான மக்களுக்கும் தீக்கைகளை வழங்கி அவர்களை ஆதீன கர்த்தர்களாக ஆக்கியது என அடிகளார் அவர்கள் ஆர் எஸ் எஸ் செய்ததைப் போல பல்வேறு பணிகளை தன் வாழ்நாள் முழுவதும் செய்தவர்கள்.

இவ்வாறு தன் வாழ்நாள் முழுவதும் சமய சமுதாய மறுமலர்ச்சிக்காக அயராது உழைத்த அடிகள் அவர்களுக்கும் ஆர் எஸ் எஸ் அமைப்பிற்கும் இந்த ஆண்டு நூறாவது ஆண்டாக அமைந்து உள்ளது. அதை ஒட்டி இருவருக்குமான நூற்றாண்டு விழாவை நமது பேரூராதீன வளாகத்தில் ஜூன் 23, ஆனித்திங்கள் 9-ம் நாள் திங்கட்கிழமை நடத்த இருக்கிறது. அதற்கு ஆர் எஸ் எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் வருகை தந்து சிறப்பிக்க உள்ளார்கள்.
அன்று காலை 6 மணி முதல் 7:15 மணி வரை தெய்வத்தமிழும் வடமொழியும் ஓதி வேள்விகள் நடத்தப்படும். வேள்வியின் நிறைவாக மோகன் பகவத் சிவலிங்கத்திற்கு அபிஷேக வழிபாடுகளை செய்ய உள்ளார்கள்.
அதைத் தொடர்ந்து 11 மணி வரை நடைபெறம் பொது நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்ள உள்ளார்.