• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

குட்டியை காலால் உதைத்து செல்லும் யானையின் செல்போன் வீடியோ காட்சி..,

BySeenu

Dec 9, 2023

கோவை தடாகம், திப்பனூர் பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்து குட்டி உடன் வெளியே வந்த மூன்று காட்டு யானைகள் அப்பகுதியில் உள்ள ராமச்சந்திரன் என்பவர் வீட்டுக்குள் புகுந்து அங்கு உள்ள பொருள்களை சேதப்படுத்தியது. அந்த வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் அந்த யானைகளை அங்கு இருந்து விரட்டினர். இதைத் தொடர்ந்து அந்த யானைகள் தொண்டாமுத்தூர் தாளியூர் பகுதிக்கு சென்று அங்கு ஒருவர் வீட்டை சேதப்படுத்தி சென்று உள்ளது. இந்நிலையில் திப்பனூர் பகுதியில் வீட்டை சேதப்படுத்தி செல்லும் போது குட்டி யானையை காலால் உதைக்கும் மற்றொரு யானை அதனை அப்பகுதியில் குடியிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து உள்ளார். அந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. பெற்றோர்கள் தவறு செய்யும் தங்கள் குழந்தைகளை அடித்து திருத்துவது போன்று யானை தனது குட்டியை காலால் உதைத்து செல்வது போன்ற இருக்கும் காட்சி பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.