இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரின் ’அவள் அப்படித்தான்’ படம் மூலமாக குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானவர் சித்ரா. கே.பாலசந்தரால் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சித்ரா. தமிழில் ஊர்க்காவலன், சேரன் பாண்டியன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்ட சித்ரா, குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்தார். சினிமா வாய்ப்புகள் இல்லாததால் சென்னை சாலிகிராமத்தில் தனியார் நிறுவனம் ஒன்றையும் நடத்தி வந்தார். சித்ராவுக்கு ஸ்ருதி என்ற மகள் உள்ளார். அவர் இந்தாண்டு 12ம் வகுப்பை முடித்துள்ளார். சித்ரா கடைசியாக 2020ம் ஆண்டு வெளியான “என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா” என்ற படத்தில் நடித்திருந்தார்.
சித்ராவுக்கு நேற்றிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. வீட்டிலே அவரது உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது. இன்று மாலை 5 மணிக்கு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.













; ?>)
; ?>)
; ?>)