• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கோவை, காந்திபுரத்தில் இரவு நின்று கொண்டிருந்த பேருந்து, மர்ம நபர் பணத்தை திருடும் சி.சி.டி.வி காட்சிகள் – வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது!!!

BySeenu

Feb 27, 2024

கோவை காந்திபுரம் பகுதியில் மூன்று பேருந்து நிலையங்கள் உள்ளது. அதில் நகரப் பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த தனியார் பேருந்தில் திருடன் ஒருவன் ஏரி அனைத்து பகுதிகளுக்கும் சென்று தேடுவது போன்றும், அதில் உறங்கிக் கொண்டு இருந்த நடத்துனரின் சட்டை பையில் வைத்து இருந்த பணத்தை திருடும் காட்சிகள் மற்றும் ஓட்டுனர் இருக்கை அருகே சென்று தேடுவது போன்ற காட்சிகளும் பேருந்தில் பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ளது. மேலும் இந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்து இது விளம்பரம் அல்ல விழிப்புணர்வு என்றும் அனைத்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் கவனமாக பணத்தை வைத்துக் கொண்டு இரவில் தூங்கவும், பாதுகாப்பை உறுதி செய்ய கண்காணித்து கேமராக்கள் பொருத்த வேண்டும் என்றும் பதிவு செய்து உள்ளனர். இந்த காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. தொடர்ந்து காந்திபுரம் பேருந்து நிலையம் பகுதியில் அங்கு வைக்கப்பட்டு உள்ள கடைகள் மற்றும் கழிவறைகளுக்கு செல்லும் நபர்களிடம் வழிப்பறி செல்போன் பறிப்பு போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த காவல்துறை இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.