• Sat. Sep 13th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

எஸ்.பி.வேலுமணி கடம்பூர் ராஜு மீது வழக்கு பதிவு …

ByK.RAJAN

Oct 15, 2024

முன்னாள் அதிமுக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜு மீது தூத்துக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கின்றது.

முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ் பி வேலுமணி கடம்பூர் ராஜு ஆகியோர் இணைந்து திருச்செந்தூரில் இன்று மதியம் சாமி கும்பிட்டு விட்டு கோவில்பட்டியில் நடைபெற உள்ள கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவசரமாக தூத்துக்குடிக்கு வரும் பொழுது அவர்களது காருக்கு இடையூறாக வழி கொடுக்காமல் வந்ததாக கூறி, ஆறுமுகநேரி சிஎஸ்ஐ சர்ச் போதகர் ஜெகன் என்பவரை சரமாரியாக இரண்டு முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அவர்களது கட்சி தொண்டர்கள் தாக்கியதால் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதகர் ஜெகன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் பண்டார விலையை சேர்ந்த நடேசன் என்பவரது மகன் ஜெகன் இவர் ஆறுமுகநேரி மடத்துவிளை சிஎஸ்ஐ ஆலய போதகராக பணியாற்றி வருகிறார்.

இவர் இன்று ஆறுமுகநேரியில் இருந்து தூத்துக்குடியில் உள்ள சிஎஸ்ஐ தலைமை அலுவலகத்திற்கு விரைவாக தனது காரில் வந்துள்ளார்.

அப்போது அவருக்கு பின்னால் திருச்செந்தூரில் சாமி கும்பிட்டு விட்டு கோவில்பட்டியில் நடைபெற உள்ள அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள விரைவாக வந்த அதிமுக முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி மற்றும் முன்னாள் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் இவரது காருக்கு முன்னே செல்ல வழி கேட்டு ஒலி எழுப்பி உள்ளனர்.

ஆனால் முன்னாள் சென்று கொண்டிருந்த போதகர் ஜெகன் தனது காரை ஒதுக்க முடியாமல் முன்னாள் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரிகளின் அணிவகுப்பால் இவரால் எங்கும் ஒதுங்க முடியாமல் திகைத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் தூத்துக்குடி முத்தையாபுரம் உப்பாத்து ஓடை பாலம் அருகே வந்தபோது இவர் தனது வாகனத்தை ஒதுக்கிய போது இவருக்கு முன்பாக இரண்டு கார்கள் மற்றும் இவருக்கு பின்னாக மூன்று கார்களில் வந்த அதிமுக அமைச்சர் வேலுமணி மற்றும் கடம்பூர் ராஜா ஆகியோர் இவரது காரை எங்கேயும் நகல விடாமல் நிறுத்தி அவரது கதவை திறந்து அடித்து துன்புறுத்தி உள்ளனர்.

இதனால் அவர் அங்கிருந்து கூச்சல் போட்டுள்ளார் இவரது காரின் சாவியை புடுங்கி தூரே எரிந்துள்ளனர்.

பின்னர் இவர் நான் தவறு செய்யவில்லை என்னையே அடிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு எங்களது காருக்கு வழி விட மாட்டாயா என்று கூறி மீண்டும் அடித்து துன்புறுத்தி உள்ளனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக போதகர்கள்

இதனால் படுகாயம் அடைந்த இவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிஎஸ்ஐ போதகர்கள் அனைவரும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு குவிந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட போதகர் ஜெகனுக்கு சிடி ஸ்கேன் போன்ற மருத்துவ பரிசோதனைகள் செய்ய மருத்துவமனை மருத்துவர்கள் அறிவுறுத்தியதின் பேரில் அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடியில் போதகர் தாக்கப்பட்ட சம்பவம் கிறிஸ்தவ மக்கள் மத்தியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து தூத்துக்குடி நகர துணை காவல் கண்காணிப்பாளர் மதனிடம் கேட்டபோது போதகரின் புகாரை பெற்றுக்கொண்டு முன்னாள் அதிமுக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.