• Wed. Sep 24th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

விஜயகாந்தின் 100-வது படமான கேப்டன் பிரபாகரன்..,

BySeenu

Aug 23, 2025

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல வெற்றிப் படங்களை தந்த கேப்டன் விஜயகாந்தின் 100-வது படமான கேப்டன் பிரபாகரன் இன்று மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிய நிலையில் கோவையில் தேமுதிகவினர் படங்களை பார்த்து கொண்டாடினார்.

சினிமா பின்புலமின்றி, புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு அளித்து, திரைப்படக் கல்லூரி மாணவர்களையும் இயக்குநர்களாக அறிமுகப்படுத்தியவர் விஜயகாந்த். அரசியலிலும் குறுகிய காலத்தில் எதிர்க்கட்சி தலைவராக உயர்ந்தவர் என்ற பெருமையும் பெற்றவர்.

பல முன்னணி நடிகர்களின் 100-வது படங்கள் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறாத நிலையில், விஜயகாந்தின் 100-வது படம் மிகப்பெரிய வெற்றி கண்டது.

ஆர்.கே. செல்வமணி இயக்கத்தில், 1991-ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் சரத்குமார், மன்சூர் அலிகான், ரூபினி, காந்திமதி, நம்பியார், ரம்யா கிருஷ்ணன், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.

34 ஆண்டுகள் கடந்தும், ஆகஸ்ட் 25 விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு கேப்டன் பிரபாகரன் இன்று (ஆகஸ்ட் 22) மீண்டும் திரையரங்குகளில் வெளியானது. கோவையில் உள்ள அவரது ரசிகர்கள், இது புதிய படம் வெளியானது போல் கொண்டாடி ரசித்தனர்.

கோவை ராம் நகரில் உள்ள செந்தில்குமரன் திரையரங்கில் படம் பார்த்துவிட்டு வெளியே வந்த தேமுதிகவினர், “சின்ன வயது நினைவுகள் மீண்டும் உயிர்த்தெழுந்தன” என தெரிவித்தனர்.

இதில் வடக்கு மாவட்ட செயலாளர் சண்முக வடிவேல், துணைச் செயலாளர் மாநில தொழிற்சங்க பேரவை துணைச் செயலாளர் அட்வகேட் முருகராஜ், வடக்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளர், மாநிலத் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் ஜனா சுலைமான், மாவட்ட துணைச் செயலாளர் ராஜா, மாவட்ட தொழில் சங்க செயலாளர் ராஜன், கணேஷ் குமார், செந்தில், மாவட்ட தொண்டரணி துணைச் செயலாளர் காஜா உசேன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.