கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் 50வது ஆண்டு பொன்விழா நிகழ்ச்சியில் குடியரசு துணை தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, மூத்த மருத்துவர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
இந்நிகழ்வில் SNR அறக்கட்டளை நிர்வாகிகள் சுந்தரராஜன், நரேந்திரன் மற்றும் மருத்துவமனை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர் சி பி ராதாகிருஷ்ணன்,
மருத்துவத் துறையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறந்த சேவைகளை செய்து வருவதாகவும், 50 ஆண்டுகளுக்கும் மேலாக medical tourism என்பதை அறிமுகப்படுத்தியதோடு அதில் சாதனை படைத்த பெருமையும் இந்த மருத்துவமனைக்கு உண்டு என குறிப்பிட்டார்.
எந்த ஒரு செயலிலும் வெற்றி பெற சேவை மனப்பான்மை, அர்ப்பணிப்பு உணர்வும் அவசியம் எனக் குறிப்பிட்டவர், அந்த வகையில் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சேவை மனப்பான்மையோடு செயலாற்றி வருவதாகவும், நூறாண்டுகளுக்கு மேல் வெற்றிகரமாக செயல் புரிய வேண்டும் எனவும் வாழ்த்தினார்.
மேலும், எந்த ஒரு மருத்துவமனை நிறுவனத்திற்கும் இரண்டு பொறுப்புகள் உள்ளன. நோயாளியை குணப்படுத்துவது மற்றும் மருத்துவர்களை உருவாக்குவது. இந்த இரண்டிலும் இந்நிறுவனம் வெற்றி முத்திரையை பதித்துள்ளது.

கோயம்புத்தூர் மாநகரில் சிறந்த சிகிச்சை அளித்து வரும் இந்நிறுவனம், மேலும் விஞ்ஞான வளர்ச்சி அடைய வேண்டும் என வாழ்த்துகிறேன், ஆரோக்கியமான இந்தியாவால் தான் விக்சித் பாரத் எனும் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க முடியும் என பேசினார்.