• Sun. Dec 1st, 2024

செப்.15 முதல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம்..

Byகாயத்ரி

Aug 25, 2022

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில், திமுக தலைமையிலான தமிழக அரசின் ஓராண்டு நிறைவடைந்ததையொட்சி அரசுப் பள்ளி மாணவா்களுக்கு காலை சிற்றுண்டி அளிக்கும் திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். முதலில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும் என தெரிவித்தார். இந்தத் திட்டத்திற்கு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த காலை உணவுத் திட்டதை வரும் செப்டம்பர் 15-ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளதாகவும் தெரிகிறது. 1,545 பள்ளிகளில் பயிலும் 1,14,095 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட உள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு வருவதை உறுதி செய்தல், ஊட்டச்சத்தை உயர்த்துதல், வருகை அதிகரித்தல், வேலைக்கும் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமை குறைத்தல் உள்ளிட்டவற்றை குறிக்கோளாக கொண்டு இந்த முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அறிவிக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.

வார உணவு அட்டவணை:

திங்கள் – அரிசி உப்புமா, ரவா உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவா உப்புமா மற்றும் காய்கறி சாம்பார்.

செவ்வாய் – ரவா கிச்சடி, சேமியா கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா கிச்சடி.

புதன் – வெண் பொங்கல், ரவா பொங்கல் + காய்கறி சாம்பார்.

வியாழன் – அரிசி உப்புமா, ரவா உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவா உப்புமா மற்றும் காய்கறி சாம்பார்.

வெள்ளி – ரவா கிச்சடி, சேமியா கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா கிச்சடி மற்றும் ரவா கேசரி, சேமியா கேசரி.

மேலும், வாரத்தில் குறைந்தது 2 நாட்கள் உள்ளூர் சிறுதானியங்களைக் கொண்டு காலை சிற்றுண்டி வழங்க வேண்டும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *