இராஜபாளையம் அதிமுக தெற்கு நகரம் மற்றும் மேற்கு ஒன்றியம் சார்பில் பூத்கமிட்டி நிர்வாகிகள் பயிற்சி முகாம் பெரிய மாரியம்மன் கோவில் அருகில் உள்ள கம்மாளர் சங்க திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளர் விருதுநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் கே டி ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு பூத் கமிட்டி நிர்வாகிகள் பயிற்சி முகாமினை துவக்கி வைத்து நிர்வாகிகளுக்கும் பொறுப்பாளர்களுக்கும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய சிறப்புரையாற்றினார். விருதுநகர் மேற்கு மாவட்ட கழக சிறுபான்மை நலப்பிரிவு பொருளாளர் மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர் ஜான் பூத் மகேந்திரன் மற்றும் விருதுநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் மண்டல தகவல் தொழில் நுட்ப பிரிவு தலைவர் கே எம் கோபி விருதுநகர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் என் சங்கர் ராமநாதன் சிவகங்கை மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கே குழந்தை பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

இந்நிகழ்ச்சியில் தெற்கு நகரச் செயலாளர் எஸ் ஆர் பரமசிவம் விருதுநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் என் எம் கிருஷ்ணராஜ் அகில இந்திய எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் எஸ் என் பாபுராஜ் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் அழகாபுரியான் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் நவரத்தினம் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக இணை செயலாளர் அழகு ராணி மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
