விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சி மண்குண்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் ஐந்தாம் வகுப்பு பயிலும்
கபிலேஷ்பாண்டியன்ஹருணியா, ரித்திகா ஆகிய மூன்று மாணவர்கள் “சிறார்கள் எழுதிய கதைகள்” என்னும் தலைப்பில்”எழுதிய கதைகள் வெளியீட்டு விழா நடைபெற்றது.

பெற்றோர்களும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். தலைமையாசிரியர் சுப்புலட்சுமி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். விழாவில் வட்டாரக் கல்வி அலுவலர் பாலமுருகன் முதல் பிரதியை ஞானக்கனி பெற்றுக்கொண்டார். மாணவர்களுக்கு சால்வை போர்த்தியும் விருது வழங்கியும் பதக்கம் வழங்கியும் கௌரவிக்கப்பட்டது.

இவ்விழாவில் வட்டார வளமைய மேற்பார்வையாளர், சங்கீதா சிறப்புரையாற்றினார். வட்டாரவளமையப் பயிற்றுனர் உமாராணி மாணவர்கள் வாழ்த்தி பேசினார். உதவி ஆசிரியர் மல்லிகா நன்றி கூறினார்.